வியாபாரி கைது

பழனியில் வாட்ஸ் அப் மூலம் இந்து அமைப்பு குறித்து அவதூறு பரப்பிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.;

Update:2022-10-07 01:15 IST

பழனி மதினாநகரை சேர்ந்தவர் சாதிக்அலி (வயது 42). பழனி அடிவாரம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிற இவர், தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவு ஒன்றை பரப்பினார். அதில் தடுப்பூசி போட, ரத்த சோதனை செய்ய சிலர் வீடுகளுக்கு வருவார்கள். அவர்கள் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள். எனவே அவர்களை விரட்டுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில், தமிழக போலீஸ் முத்திரையும் இடப்பட்டிருந்தது போல் இருந்தது. இதுகுறித்து இந்து அமைப்புகள் சார்பில், பழனி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாதிக்அலியை கைது செய்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்