வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

நாசரேத் நகர வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடந்தது.;

Update:2022-08-02 21:58 IST

நாசரேத்:

நாசரேத் நகர வியாபாரிகள் சங்க 46-வது ஆண்டு விழா மில் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நகர வியாபாரிகள் சங்க தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவர் ஞானையா வரவேற்று பேசினார். சங்க பொதுச் செயலாளர் இராவி.அசுபதிசந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் (பொறுப்பு) எம்.ஜெயக்குமார் வரவு-செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.பட்டாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திருச்செந்தூர்-நெல்லை ரெயில்வே பாதையில் நடைபெறும் மின்மயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து ரெயில் இயக்கிட மத்திய அரசை வலியுறுத்துவது, நாசரேத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க புதிய தலைவராக ஜி.எட்வர்ட் கண்ணப்பா, பொதுச்செயலாளராக இராவி.அசுபதி சந்திரன், பொருளாளராக எம்.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். சங்க இணை செயலாளர் டி.டி.புருஷோத்தமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்