பாரம்பரிய வழக்கப்படி எருதுகட்டு விழா

பாலமேட்டில் பாரம்பரிய வழக்கப்படி வடமாடு எருதுகட்டு விழா நடந்தது.;

Update:2022-08-07 01:09 IST

அலங்காநல்லூர்

பாலமேட்டில் பாரம்பரிய வழக்கப்படி வடமாடு எருதுகட்டு விழா நடந்தது.

எருதுகட்டு விழா

மதுரை மாவட்டம் பாலமேட்டில் அய்யனார், கருப்புசாமி கோவில் ஆடி திருவிழா நடந்தது. இதில் வாணவேடிக்கையுடன், சாமிகள் பட்டத்து குதிரையுடன், பரிவார தெய்வங்களுடன் எடுத்துவரப்பட்டது. பின்னர் சாமி சிலைகள் கோவிலில் வைத்து வைக்கப்பட்டு கண் திறக்கப்பட்டது. இரவு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடனும் சுவாமிகள் வர்ணம் தீட்டப்பட்ட பட்டத்து குதிரைகளுடனும், நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட சிறிய குதிரைகளுடனும், அலங்கார சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலில் போய் இருப்பிடம் சேர்ந்தது.

மறுநாள் காலையில் மஞ்சமலை சுவாமி ஆற்றில் உள்ளவாடிவாசல் முன்பாக மேளதாளத்துடன் வடக்குதெரு பொது மகா சபை சார்பில் வடம் பூட்டி எருது கட்டு விழா நடந்தது, இதில் மஞ்சமலை சுவாமி கோவில் காளை உள்பட 19 காளைகளுக்கு பாரம்பரிய, பழங்கால சம்பிரதாயபடி சந்தனம், விபூதி, குங்குமம் மற்றும் மலர் மாலைகள், வேட்டி, துண்டுகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

அனுமதி இ்ல்லை

பின்னர் ஒவ்வொரு காளைகளாக வடம் பூட்டி அவிழ்த்து விடப்பட்டது, 19 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை வீரர்கள் யாரும் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த எருதுகட்டு விழாவை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்