பாரம்பரிய உணவு திருவிழா

பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

Update: 2023-03-29 18:26 GMT

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வட்டார அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் மகளிர் சுய உதவி குழுவினருக்கு நடைபெற்றது. அதன்படி கந்தர்வகோட்டையில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறுதானியங்கள், மூலிகை சூப் வகைகள், கீரை வகைகள், பால் உணவு வகைகள் ஆகியவற்றை தயார் செய்து போட்டியில் பங்கேற்றனர். இதில் முதல் பரிசை கந்தர்வகோட்டை மகாலட்சுமி மகளிர் குழுவும், 2-ம் பரிசை கந்தர்வகோட்டை அபிராமி மகளிர் குழுவும், 3-ம் பரிசை அம்மன் மகளிர் குழுவும் தட்டிச் சென்றன. ஆறுதல் பரிசுகளை கல்லாக்கோட்டை தென்றல் குழுவும், நடுப்பட்டி மாதா குழுவும், பழைய கந்தர்வகோட்டை இசைத்தென்றல் குழுவும் பெற்றனர். நிகழ்வில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தேவராஜன், வட்டார மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்