மதமோதலை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது - அண்ணாமலை
தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பொய் சொல்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார்;
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது ,
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பொய் சொல்கிறார். 144 தடை உத்தரவு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஒரிஜினல் கோப்புகளை தராமல் திருத்தம் செய்து கோப்புகளை வழங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014 கோரிக்கை வேறு, தற்போதைய கோரிக்கை வேறு. 2014ல் தொடரப்பட்ட வழக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றவேண்டும் என்பது. தற்போது, தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என யாரும் கோரவில்லை. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற கோருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தமானது. கோயிலுக்கு சொந்தமானது. தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமானது என முந்தைய தீர்ப்பு உறுதி செய்துள்ளது. சிறுபான்மையினர் தாஜா அரசியலில் ஈடுபட்டுள்ளது திமுக.திருப்பரங்குன்றம் விவகராத்தில், நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, மத மோதலை தூண்டும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது. என தெரிவித்தார்.