தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்ட ஏற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இம்மாதம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெற இருக்கிறது.;
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இம்மாதம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மண்டல கூட்ட ஏற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.