3 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஆனைமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் 3 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
ஆனைமலை
ஆனைமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் 3 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆறு போல் மழைநீர் ஓடியது.
இதற்கிடையில் சுப்பைய கவுண்டன்புதூர் ெரயில்வே கேட் அருகே புங்கன் மரம் ஒன்று சாலையில் விழுந்தது. மேலும் நஞ்சை கவுண்டன் புதூர் மும்முனை சந்திப்பில் புங்கன் மரம் விழுந்தது. இதனால் மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
வெட்டி அகற்றினர்
இதேபோன்று அம்பராம்பாளையம் பகுதியில் ராட்சத மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு முழுவதும் மின்சாரம் இன்றி அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்ே்டாம். மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று(நேற்று) அதிகாலை 5 மணிக்கு தான் மின்கம்பிகள் சரி செய்யப்பட்டு, மின்வினியோகம் நடந்தது. எனவே விரைந்து செயல்பட மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.
வால்பாறை
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் 4-வது நாளாக நேற்றும் கோடை மழை பெய்தது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை சுமார் 1 மணி நேரம் ெகாட்டி தீர்த்தது. மழையில் நனையாமல் இருக்க மாணவ-மாணவிகள், பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி சாலைகளில் நடந்து செல்வதை காண முடிந்தது.