ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு பயிற்சி
சோளிங்கரில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.;
சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான ஜல்ஜீவன் மிஷன் திட்டம் சார்பில் 20 ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயிற்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், சுகாதாரமான குடிநீர் வழங்குதல், தேவையான இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பைப் லைன் அமைத்தல் போன்ற பணிகள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தி.மு.க. முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.