மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோருக்கு பயிற்சி
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோருக்கு பயிற்சி;
ஆனைமலை
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர், அங்கன்வாடி பணியாளருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜெயந்தி சைகை மொழியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கி வைத்தார். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், பகல் நேர பாதுகாப்பு ஆசிரியர் மற்றும் உதவியாளர் கலந்து கொண்டனர். பின்னர் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஆனைமலை ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் ஆரம்ப கால அடையாளம் காணுதல், மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்வதின் மூலமும், முறையான பயிற்சி வழங்குவதன் மூலமும் குறைபாடுகளை எவ்வாறு தடுக்க முடியும் என்பது குறித்து விளக்கினர். மேலும் பகல் நேர பாதுகாப்பு மைய செயல்பாடுகள், இல்லம் சார்ந்த பயிற்சிகள், உதவி உபகரணங்கள், மாணவர்கள் அடைந்து உள்ள முன்னேற்ற நிலைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.