சத்துணவு சமையலர்களுக்கு பயிற்சி

சின்னசேலம் ஒன்றியத்தில் சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-10-04 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் பணி புரியும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. இதை ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் வரவேற்றார். முதற்கட்டமாக 50 சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு பற்றி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு பழனி, உணவுப்பொருட்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும், உணவு சமைக்கும் போதும், பரிமாறும் போதும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எடுத்துக்கூறினார். முதலுதவி, அதன் முக்கியத்துவம், முதலுதவி பெட்டி குறித்து சுகாதார ஆய்வாளர் மாயக்கண்ணன் விளக்கம் அளித்தார். எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்காக சிறுதானிய உணவு வகைகள் பற்றி குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சாந்தி, தகவல் தொடர்பு கொள்ளும் திறன், பயனுள்ள தகவல் தொடர்பை ஏற்படுத்துதல் பற்றி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா பயிற்சி அளித்தார். மன அழுத்தம், மேலாண்மை மற்றும் யோகா பயிற்சி, உடல் ஆரோக்கியம் முக்கியத்துவம் குறித்து யோகா பயிற்சியாளர் எடுத்துரைத்தார். முடிவில் ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் குமரவேல் நன்றி கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்