சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை - சோலையாறு அணை சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
தமிழகத்தில் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று மாலை வால்பாறையில் இருந்து சோலையாறு அணை செல்லும் சாலையில் பழைய வால் பாறை பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் சாலையோரத்தில் இருந்த தேயிலை தோட்ட பகுதியில் இருந்த மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் வால்பாறை- சோலையாறு அணை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள், பொக் லைன் எந்திரம் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதனால் போக்குவரத்து சரியானது. சாலையில் மரம் விழுந்ததால் சோலையாறு அணை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.