பழங்குடியினர் பண்பாட்டு ஊர்வலம்

நாமக்கல்லில் பழங்குடியினர் பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2023-09-22 00:02 IST

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கல்லில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. கடைசி நாளான நேற்று பழங்குடியின மக்களின் பண்பாட்டு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ரெங்கசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல் - பரமத்தி சாலை போதுப்பட்டி பிரிவு அருகில் இருந்து பாரம்பரிய கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட வனஉரிமை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

இந்த ஊர்வலம் நாமக்கல் பூங்கா சாலையில் முடிவடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் பெருமாள் வரவேற்று பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத், அந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் டாக்டர் பாபுராவ், அமைப்பாளர் ஜிதேந்திர சவுத்ரி, மாநாட்டு வரவேற்புகுழு தலைவர் டில்லி பாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி மற்றும் 18 மாநிலங்களின் ஆதிவாசி உரிமைகளுக்கான அமைப்பின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநாட்டு வரவேற்புகுழு பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தையொட்டி நேற்றுமுன்தினம் இரவு கம்யூனிஸ்டு கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் கொடிகளை கட்டினர். அதை போலீசார், நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் அவிழ்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கம்யூனிஸ்டு கட்சியினர் மணிக்கூண்டு அருகே சாலைமறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்