இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.;

Update:2022-09-11 08:26 IST

லண்டன்,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராணி எலிசபெத் மறைவு செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இங்கிலாந்தின் கேம்பரளி நகரில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் உருவப்படத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்

Tags:    

மேலும் செய்திகள்