அ.பாண்டலத்தில் கிராம சபை கூட்டம் உதயசூரியன் எம்எல்ஏ பங்கேற்பு

அ.பாண்டலத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உதயசூரியன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.

Update: 2023-05-01 18:45 GMT

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் தலைவர் ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், கால்நடை மருத்துவமனை, ஏரி வாய்க்காலில் தடுப்பணை, மயானத்திற்கு சுற்றுச்சுவர், 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கக்கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜவர்மன், ஒன்றிய பொறியாளர் ராஜகோபால், நகர செயலாளர் துரை தாகபிள்ளை, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்