துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை;

Update:2023-01-04 00:15 IST

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கி தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு சீருடை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் முருகன், துணை தலைவர் கதீஜாபிவி, கவுன்சிலர்கள் சுந்தரமூர்த்தி, குமார், ரமேஷ், சரவணன், அனிதாமோகன், வேம்புஆறுமுகம், சுகிதமிழ்ச்செல்வன், காமராஜ், மாணிக்கம், அகமதுசரிப் மற்றும் எழுத்தர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்