தொழிற்சங்க கவுன்சில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்க கவுன்சில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்;
வால்பாறை
வால்பாறையில் சிங்கோனா அருகே உள்ள சின்னக்கல்லார் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில், பொள்ளாச்சி சரளப்பதி பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா யானையை வனத்துறையினர் விட்டனர். இந்த மக்னா யானையால் சின்னக்கல்லார் பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் நிர்வாகிகள் சிங்கோனா 2-வது பிரிவு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மக்னா யானையை மீண்டும் பொள்ளாச்சி பகுதியிேலயே விட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.