பொன்னியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
நெல்வாய் கண்டிகை கிராமத்தில் பொன்னியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.;
நெமிலியை அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு நெய், பால், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு மதியம் அனைத்து பக்தர்களும் பொங்கள் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். தொடர்ந்து மாலையில் பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதிகளில் ஊர்வலமாக வந்து அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.