அம்மன் கோவிலில் வரலட்சுமி பூஜை
அம்மன் கோவிலில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது;
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பலகுடி கீழரத வீதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு பூைஜ நடந்தது. முன்னதாக அம்மனுக்கு 11 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு நவதானியங்கள் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து பெண்களுக்கு வளைகாப்பு அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு சாத்தப்பட்ட நவதானியங்கள் அவர்களுக்கு மருந்தாக வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் வளையல்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவில் திருவிழா கமிட்டி மற்றும் பெண்கள் குழுவினர் செய்தனர்.