வேடசந்தூர் ஒன்றியக்குழு கூட்டம்

வேடசந்தூரில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-02-10 19:00 GMT

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் வரவேற்றார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

கவுன்சிலர் கவுசல்யா:- மழை அதிகமாக பெய்து அனைத்து கல்குவாரிகளும் நிறைந்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் குட்டையில் தவறி விழுந்து விடுவார்கள். எனவே குவாரிகள் அனைத்திற்கும் கம்பி வேலி அமைக்க வேண்டும்.

கவுன்சிலர் உமாமகேஸ்வரி:- பூத்தாம்பட்டியில் அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

தலைவர்:- உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் புஷ்பவள்ளி:- குட்டம் சுக்காம்பட்டியில் அங்கன்வாடி சமையல் கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் திறந்தவெளியில் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு சமையல்கூடம் கட்டவேண்டும்.

பொறியாளர் தங்கவேல்:- இதற்கான ஆணை பெற்று விட்டோம். உடனடியாக சமையல் கூடம் கட்டிக் கொடுக்கப்படும். மேற்கண்டவாறு விவாதங்கள் நடைபெற்றது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்