திருப்பத்தூர் வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூர் வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;
திருப்பத்தூர் மார்ச்.6-
திருப்பத்தூர் வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பத்தூர் டவுன் பாரதி ரோட்டில் அமைந்துள்ள குருமன்ஸ் குல அலிய குலத்தாரின் குலதெய்வமான வீரபத்திர சுவாமி, கோடியள்ளிராயன் சுவாமி, தோரளப்ப சுவாமி, கரிபீரப்ப சுவாமி, அனிபீரப்ப சுவாமி, தாய் லிங்கம்மாள் சுவாமி மற்றும். நந்திகேஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சின்னகுளம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் இருந்து கங்கை பூஜையுடன் தோரளாயப்ப சுவாமி கரகத்துடன் திருவீதி உலா வந்து கோவிலை அடைந்ததனர். பின்னர் அங்கு மங்கல இசை, வேதபாராயணம், அனுக்ஞை, அங்குரார்பணம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேஷம், முதல் கால பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து கணபதி ஹோமம், குருமன்ஸ் இன மக்களின் சேவை ஆட்டம், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் கால யாக சாலை பூஜை, தம்பதியர் சங்கல்பம், விஷேச 108 திரவிய ஹோமம் நடந்தது. பின்னர் புனித நீர் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட கலச புறப்பாடு நடந்தது. கோவிலை வலம் வந்து நந்தீஸ்வரரருக்கும், கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், தோரளப்ப சுவாமி, கரிபீரப்ப சுவாமி, தாய்லிங்கம்மா சுவாமிக்கும், நவக்கிரக மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரளியப்ப சுவாமி மற்றும் வீரபத்திர சுவாமி கோவில் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.