வீரகாளியம்மன் கோவில் திருவிழா

பெருமாங்குடி வீரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;

Update:2023-09-04 02:17 IST

பாபநாசம்:

பாபநாசம் பெருமாங்குடி நடுத்தெருவில் வீரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம். முளைப்பாரி, அலகு காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெருமாங்குடி நடுத்தெரு நாட்டாண்மை மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்