வெங்கடேஸ்வரபுரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

வெங்கடேஸ்வரபுரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.;

Update:2023-09-04 00:15 IST

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள கே.வெங்கடேஸ்வரபுரம் ஐஸ்வர்யா விநாயகர் மற்றும் வழிகாட்டி பனையடி கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 8.30 மணிக்கு விநாயகர் பூஜை, கும்ப பூஜை, வேதபாராயணம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் ஐஸ்வர்யா விநாயகர், பனையடி கருப்பசாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் வெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்து தலைவர் திணேஷ்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்