அரிவாளுடன் சமூக வலைதளங்களில் வீடியோ; வாலிபர் கைது

ஏர்வாடி அருகே அரிவாளுடன் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-06 00:08 IST

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி தென்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் ராகுல் (வயது 20). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையை தூண்டும் வகையிலும், கையில் அரிவாளுடனும் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருக்குறுங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராகுலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்