கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

எட்டயபுரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-30 19:00 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே நில உச்சவரம்பில் கைப்பற்றப்பட்ட நிலத்தில் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனித்தனியாக மனுக்கள் வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாதாபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தலித் விடுதலை இயக்க மாநில மாணவரணி செயலாளர் பீமாராவ் தலைமையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் எட்டயபுரம் தாசில்தார் மல்லிகா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான மனுக்கள் தாலுகா அலுவலகத்தில் விசாரணை முடித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்