விஸ்வகர்ம ஜெயந்தி விழா

கடையத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடைபெற்றது.;

Update:2023-09-18 00:30 IST

கடையம்:

கடையத்தில் விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது. சங்க கொடியை தலைவர் வேல்முருகன் ஏற்றினார். பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை கவுரவ தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் தலைவர் பழனி, பொருளாளர் நவநீதகிருஷ்ணன், உதவி தலைவர் செல்வராஜ், முன்னாள் செயலாளர் குமரேசன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மாரிகுமார், மீனாட்சி சுந்தரம் உள்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், செயலாளர் செல்வகணேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்