மோசடி வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டவர்: சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபர் கைது

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த தொழிலதிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் .

Update: 2023-07-04 06:41 GMT

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த காஜா மைதீன் ஷேக் (வயது 55) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, அவர் மீது 2019-ம் ஆண்டு ஐதராபாத் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து உள்ளதும், கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த காஜா மைதீன் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றால் பிடித்து தருமாறு ஐதராபாத் போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கி இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து காஜா மைதீன் ஷேக்கின் விமான பயணத்தை ரத்து செய்த விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவரை கைது செய்து அங்குள்ள அறையில் அடைத்து வைத்தனர். இதுபற்றி ஐதராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை வந்து கைதான காஜா மைதீன் ஷேக்கை அழைத்துச்செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்