தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

ஆலடிக்குமுளை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவியை அண்ணாதுரை எம்.எல்.ஏ. வழங்கினர்.;

Update:2023-10-01 02:11 IST

கரம்பயம்:

பட்டுக்கோட்டைஅருகே ஆலடிக்கு முளை ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியம் தி.மு.க. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. திறந்து வைத்து இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தினை வழங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஆலடிக்குமுளை ஊராட்சி மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமநாதன், அவைத்தலைவர் இளங்கோ, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆதி ராஜேஷ், பள்ளி வளர்ச்சி குழு செயலாளர் புகழேந்தி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், இளைஞரணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்