இலங்கையில் ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலை தான் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும் - டி.டி.வி.தினகரன்

இலங்கையில் ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலை தான் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Update: 2022-07-13 18:17 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

அடிப்படை உறுப்பினர்களால் மட்டும்தான் அதிமுகவின் பொது செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இதை யாரும் மாற்ற முடியாது. அதை எம்.ஜி.ஆர் கட்சி சட்ட திட்டத்திலும், உயிலிலும்கூட எழுதி உறுதிப்படுத்தியுள்ளார். சிலரை வசியப்படுத்தி என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கினார்கள். இன்று அந்த பலனை அனுபவிக்கிறார்கள்.

பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது. நாளை இதே நிலை எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும். இலங்கையில் இனவெறியை தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும். துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. விரைவில் அதிமுகவை மீட்போம்.

தேர்தலின்போது வெளியிட்ட எந்த அறிவிப்புகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியும் மக்களால் தூக்கி எறியப்படும். மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்