பஸ்சில் பயணம் செய்தபோதுமயக்க கேக் கொடுத்து மூதாட்டியிடம் நகை திருட்டு

தேனியில் பஸ்சில் பயணம் செய்தபோது மயக்க கேக் கொடுத்து மூதாட்டியிடம் நகையை பறித்த பெண்ணை போலீசாா் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-07 18:45 GMT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி செண்பகவள்ளி (வயது 61). இவர் கோவையில் தனது பேரனை பார்த்துவிட்டு அங்கிருந்து பஸ்சில் தேனிக்கு புறப்பட்டார். அப்போது அவருக்கு பக்கத்து இருக்கையில் ஒரு பெண் அமர்ந்தார். அந்த பெண் ஒரு கேக்கை செண்பகவள்ளியிடம் சாப்பிடக் கொடுத்தார். அதை சாப்பிட்ட அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். தேனி புதிய பஸ் நிலையம் அருகே வந்த நிலையில் மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது மகள் சித்ராவிடம் தெரிவித்தார். இதையடுத்து சித்ரா தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து மயக்க கேக் கொடுத்து நகையை திருடிய மர்ம பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்