பரவலாக மழை

திருமருகல் பகுதியில் பரவலாக மழை;

Update:2023-06-29 00:15 IST

திட்டச்சேரி:

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இந்த நிலையில் மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலேயே திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், குருவாடி, போலகம், திருப்புகலூர், வவ்வாலடி, ஆலத்தூர், குத்தாலம், எரவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென நேற்று மழை பெய்தது. மாலை 6 மணி அளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதனால் வெயிலின் தாக்கத்தால் வெளியே வராமல் இருந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழையால் பருத்தி செடிகள் சாய்ந்து விழுந்தது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்