சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.;

Update:2022-08-08 06:33 IST

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல்,வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், காலை அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் சற்று சிரமமடைந்துள்ளனர். அதேவேளை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்