கூட்டணி நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன.?
அதிமுக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.;
சென்னை,
அதிமுக-பாஜக கூட்டணியில் நேற்று அன்புமணி தலைமையிலான பாமக இணைந்தது. இதற்கிடையில் அமித்ஷாவை சந்திப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். இதன் பின்னர் இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எங்கள் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது; “நான் ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். தை பிறக்கும் வரை பொறுமையாக இருங்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.