அரசு பள்ளியில் வன உயிரின தினம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

அரசு பள்ளியில் வன உயிரின தினம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-03-03 23:02 IST

அரசு பள்ளியில் வன உயிரின தினம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை வனச்சரகம் சார்பில் அடி அண்ணாமலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் வன உயிரின தினம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மானவிகள் கலந்து கொண்டனர்.

வனவிலங்கின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து மாணவிகள் நடனம், மாறுவேடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்