அரூர் அருகேமனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு2 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை

Update:2023-04-23 00:30 IST

அரூர்:

அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயற்கை உபாதை கழிக்க அருகே உள்ள கிழங்கு தோட்டத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் பயந்தபடி ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிழங்கு காட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு 2 பேரின் ஆதார் கார்டுகள் கிடந்தன.

இதுகுறித்து மனநலம் பாதித்த பெண்ணின் தாயார் அரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கிழங்கு காட்டிற்குள் 2 பேர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த கோபால் (60), சின்னராஜ் (56) ஆகிய 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்