தங்க சங்கிலி திருடிய பெண் கைது
நெல்லையில் தங்க சங்கிலி திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை தச்சநல்லூர் ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் நாராயணவடிவு (வயது 39). இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (27). நாராயணவடிவு வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் கடந்த மாதம் திருடி சென்றார்.
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேச்சியம்மாள் தான் தங்க சங்கிலியை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேச்சியம்மாளை கைது செய்தனர்.