விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

Update: 2022-10-01 20:05 GMT

தஞ்சையை அடுத்த கூடலூர் சின்னத்தெருவை சேர்ந்த மோகன் மனைவி வனிதா (வயது 36). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இவருக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கி சிகிச்சை பலனின்றி வனிதா இறந்தார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்