செஞ்சி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
செஞ்சி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
செஞ்சி,
செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த். இவருடைய மனைவி ரேவதி (வயது 35). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் செஞ்சி புறவழிச்சாலையில் ரேவதி விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து, ரேவதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.