பொறையாறு:
பொறையாறு பெரிய காலனி பகுதியை சேர்ந்த செல்வம் தேவராஜ் மனைவி லில்லி (வயது 55). நேற்றுமுன்தினம் இவர் பொறையாறு அருகே கீழ மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வயலில் மற்ற பெண்களுடன் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லில்லி இறந்தார். இதுகுறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.