ஹெல்மெட் அணியாமல் 100 முறை மொபட் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்

சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் ஹெல்மெட் அணியாமல் 100 முறை மொபட் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத்தை உடனே செலுத்த போலீசார் அறிவுறுத்தினர்.

Update: 2022-07-02 21:00 GMT

சேலம் 5 ரோட்டில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் 10-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வழியாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவோர் செல்போன் எண்ணுக்கு தானாகவே குறுஞ்செய்தி அனுப்பி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த அபராத தொகையை சம்பந்தப்பட்ட நபர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 5 ரோடு ஈரடுக்கு மேம்பாலத்தில் 100 முறைக்கு மேல் மொபட் ஓட்டி சென்றுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணுக்கு தானியங்கி கேமராமூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான அபராத தொகை அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை அந்த பெண் அபராத தொகை செலுத்தவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பெண் உடனே அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்