சேலம் சீலநாயக்கன்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் சீலநாயக்கன்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ், ராமையன் காடு அடுத்த சூரிய கவுண்டர் காட்டைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன் (வயது 46). சமையல் தொழிலாளி. இவரது மனைவி அமுதா (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் சபரீஸ்வரன் சாப்பிட்டு கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அமுதா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.