கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலியானார்.

Update: 2023-03-10 20:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் வடகரையில் உள்ள கோவில் திருவிழாவிற்கு ராஜபாளையத்தில் இருந்து பொன்மாரி (வயது 25), அவரது உறவினர் புவனேஸ்வரி (22) ஆகிய 2 பேரும் வந்திருந்தனர். ஊருக்கு செல்வதற்காக இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் ரோட்டில் வன்னியம்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் பொன்மாரி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கொல்லம் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் பணிக்கர் (35) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்