வடமாநில இளைஞரை அரிவாளால் தாக்கிய சிறுவர்கள் - செல்வப்பெருந்தகை கண்டனம்
மாணவர்களுக்கு இளம் வயதிலிருந்து நீதிபோதனை வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தவேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரெயில் நிலையத்திற்கு வெளியே வடமாநில இளைஞரை உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காட்சி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ரீல்ஸ் மோகத்தில் இத்தகைய கொடூர செயலை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாகரீகம் வளர்ச்சியடைந்த நிலையிலும் மனிதாபிமானமற்ற முறையில் இத்தகைய செயலை சிறுவர்கள் செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமானது. காவல்துறையினர் 4 சிறுவர்களை கைது செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், சிறுவர்கள் மனதில் இத்தகைய வக்கிரமான எண்ணங்கள் எப்படி தோன்றுகிறது என்பதை ஆராயவேண்டும்.
மாணவர்களுக்கு இளம் வயதிலிருந்து நீதிபோதனை வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தவேண்டும். சக மனிதர்களை நேசிக்கும் நம் நாட்டில் வருங்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க பிடிபட்டவர்கள் சிறார்களாக இருந்தாலும் காவல்துறையினர் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.