விஷம் தின்று பெண் தற்கொலை
மயிலாடுதுறையில் விஷம் தின்று பெண் தற்கொலை செய்து ெகாண்டார்.;
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை கூறைநாடு அறுபத்துமூவர்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி பிரியா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த பிரியா எலிபேஸ்ட்(விஷம்) தின்று மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் பிாியாதிருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.