ஆன்லைனில் கடன் கொடுத்ததாக கூறி பெண்ணுக்கு மிரட்டல்

செல்போனில் வந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ஆன்லைனில் கடன் கொடுத்ததாக கூறி பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.;

Update:2022-08-04 19:56 IST

துடியலூர்

செல்போனில் வந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ஆன்லைனில் கடன் கொடுத்ததாக கூறி பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

வாட்ஸ்அப்பில் லிங்க்

கோவை துடியலூரை சேர்ந்தவர் சரண்யா. ஊட்டியை பூர்வீக மாக கொண்ட இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்க ளுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் கடன் செயலியின் லிங்க் ஒன்று வந்தது.

அவர், அதை பார்ப்பதற்காக கிளிக் செய்தார். உடனே அவருக்கு ஆன்லைன் மூலம் கடன் தருவதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த லிங்கை விட்டு வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நீங்கள் ஆன்லைன் செயலியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளதால் அதற்குரிய தொகையை செலுத்துமாறு கூறிய உள்ளார். அவரிடம், நான் கடன் வாங்கவே இல்லை என்று சரண்யா கூறி உள்ளார்.

ஆபாசமாக சித்தரிப்பு

அதற்கு அந்த நபர், நீங்கள் கடன் வாங்கி உள்ளதால் பணம் கட்டியே ஆக வேண்டும் என கூறி உள்ளனர். ஆனால் சரண்யா பணம் கட்ட முடியாது என்று கண்டிப்புடன் கூறி உள்ளார்.

இதையடுத்து அவருடைய செல்போனில் பேசி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து உள்ளனர். மேலும் சரண்யாவின் குடும்பத் தினரின் புகைப்படங்களை இணையத்தில் இருந்து எடுத்து ஆபாச மாக சித்தரித்து வெளியிடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

இது குறித்து சரண்யா, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் வெளி யிட்ட வீடியோவில், வாட்ஸ்-அப்பில் வரும் கடன் செயலி லிங்குக ளை இனி யாரும் கிளிக் செய்ய வேண்டாம்.

அது போன்ற லிங்குகளை உடனே அழித்து நீக்கி விடுங்கள். என்னை போல் யாரும் கஷ்டப்படவேண்டாம் என கண்ணீர் மல்க படுகர் மொழியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்