மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் குவிந்தனர்;

Update:2023-09-23 00:15 IST

அருப்புக்கோட்டை

தமிழகம் முழுவதும் கடந்த 15-ந் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த திட்டத்தில் மகளிர் பலர் உரிமை தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர். இதற்காக உரிமைத் தொகை கிடைக்காத மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாத பெண்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தாசில்தார் அறிவழகன் தலைமையில் 6 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அந்த அதிகாரிகள் ஏற்கனவே விண்ணப்பித்து உரிமைத்தொகை கிடைக்கப் பெறாத மகளிருக்கு ஏன் உரிமை தொகை கிடைக்கவில்லை என்ற காரணம் குறித்தும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்கின்றனர். மேலும் பெறப்படும் விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து தகுதியான மகளிர்க்கு உரிமை தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு முகாமில் உரிமை தொகை கிடைக்கப் பெறாத நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்