முத்தையாபுரத்தில் மகளிர் தின விழா; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

முத்தையாபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.;

Update:2023-03-20 00:15 IST

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் தாயகம் டிரஸ்ட் மற்றும் மகளிர் கூட்டமைப்பு சாா்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவா் பேசியதாவது:-

இன்றைக்கு பெண்கள் பல்வேறு நிலைகளில் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. முன்பு பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. நம்முடைய பிரச்சினைகளை கண்டு துவண்டு விடக்கூடாது. என்னால் முடியும் என்ற தைரியத்தை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும். 1989-ல் கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தார். அதற்கு முன்னால் ஒருவருக்கு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு சொத்துரிமை கிடையாது என்ற நிலை இருந்து வந்தது. இந்த நிலையை கலைஞர் மாற்றினார். இன்றைக்கு பெண்கள் பைலட்டாக, மெட்ரோ ட்ரெயின் ஓட்டுனராக மற்றும் பஸ், ஆட்டோ ஓட்டுநராக செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிருக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி கவுன்சிலர் விஜயகுமார், தாயகம் டிரஸ்ட் இயக்குனர் ஜெயக்கனி, நீதி குழும உறுப்பினர் உமாதேவி, சமுதாய அமைப்பாளர் சரவணபாமா, பிரகாசபுரம் கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் அஜிதா வின்சி, மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் காசிகனி, டாக்டர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்