போக்சோவில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;
நத்தம்-கோவில்பட்டியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர், 15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் நத்தம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரணை நடத்தி, பாண்டிச்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.