விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தச்சம்பட்டு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-05-20 16:14 IST

வாணாபுரம்

தச்சம்பட்டு அருகே உள்ள சூ.பாப்பாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 64), கூலி தொழிலாளி. இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் அதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாய பயிர்களுக்கு அடிக்க வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காட்டாம்பூண்டி அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்