தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-18 00:14 IST

ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 60). கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் ராமு புடவையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்