தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-20 16:07 IST

திருவண்ணாமலை காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கபாலி (வயது 38), தொழிலாளி. இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கபாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்